2026 ஜனவரி 21, புதன்கிழமை

பொகவந்தலாவையில் 11 பேருக்கு தொற்று; ஒருவர் மரணம்

Kogilavani   / 2021 மே 12 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

பொகவந்தலாவை பொது சுகாதார பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் 11 பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஒருவர் தொற்றினால் மரணமடைந்துள்ளார்.

டிக்கோயா பிலிங்பொனி, பொகவந்தலாவை, பொகவானை ஆகியே தோட்டப் பகுதிகளிலேயே 11 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட 11 பேரும் பிலிங்பொனி பகுதியிலள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருபவர்கள் என்று, பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

புளியாவத்தை தோட்டத்தைச் சேர்ந்த நபரொருவரே, கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளதுடன், இவரது உடல், சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக நோர்வுட் தகனசாலையில்  நேற்று (11) தகனம் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை  நோர்வூட் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X