2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

பொகவந்தலாவையில் ஓட்டோ கடத்தல்

Nirosh   / 2021 மார்ச் 27 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.சதீஸ்)

பொகவந்தலாவை டியன்சின் நகரில் வர்த்தக நிலையத்துக்கு முன்பாக நிருத்தி வைக்கபட்ட ஓட்டோ ஒன்று இனந்தெரியாதவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஒட்டோ கடத்தல் சம்பவம் அங்குள்ள சீ.சீ.டி.வி கமராவில் பதிவாகியுள்ள நிலையில், சிவப்பு நிற ஓட்டோவில் வந்தவர்களே கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் கடத்தப்பட்ட ஓட்டோ பலாங்கொடை பகுதிக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதேவேளை கடந்த சில தினங்களாக பொகவந்தலாவை பிரதேசத்தில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X