Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜனவரி 17 , பி.ப. 01:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ,எஸ்.கணேசன்
பொறியில் சிக்கி இறந்த சிறுத்தையின் சடலம் வியாழக்கிழமை( 16) ஆம் திகதி மதியம் கண்டெடுக்கப்பட்டதாகவும், அந்த உடல் கம்பளை வனவிலங்கு அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் புஸ்ஸல்லாவை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
புஸ்ஸல்லாவை பொலிஸ் பிரிவுக்கு சொந்தமான நயபன தோட்டத்தின் மேல் பகுதியில் வேட்டைக்காரர்கள் வைத்த வலையில் சிக்கி சிறுத்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக தோட்டத் தொழிலாளர்கள், புஸ்ஸல்லாவை பொலிஸாருக்கு தகவல் அளித்திருந்தனர்.
உயிரிழந்த சிறுத்தையின் சடலம், நீதவானின் உத்தரவின் பேரில் ரந்தெனிகல வனவிலங்கு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பப்படும் என்று வனவிலங்கு அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .