Editorial / 2019 ஜூலை 24 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ், ரஞ்சித் ராஜபக்ஷ
பொலிஸாருக்கு சவால் விடுத்து ஓட்டோ ஒன்றைக் கடத்திச் சென்ற நபர்களைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளில், ஹட்டன் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹட்டனுக்கு நேற்று (23) வருகைத்தந்த நோர்வூட் பகுதியைச் சேர்ந்த நபரொருவர், தனது ஓட்டோவை, ஹட்டன் நகரிலுள்ள வாகனங்களைக் குத்தகை அடிப்படையில் பெற்றுத்தரும் நிறுவனத்துக்கு முன்பாக நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார்.
மேற்படி நபர் திரும்பிவந்துப் பார்த்தபோது, அவ்விடத்தில் ஓட்டோ இருக்கவில்லை என்றும் இவ்விடயம் தொடர்பில், ஹட்டன் பொலிஸில் உடனடியாக முறைப்பாடு செய்ததாகவும் தெரியவருகிறது.
ஓட்டோவைக் கடத்திச் சென்ற நபர்கள், பொலிஸாருக்கு அலைபேசி மூலம் தொடர்பை ஏற்படுத்தி, தாங்கள்தான் ஓட்டோவைக் கடத்திச் சென்றதாகவும் முடிந்தால் தங்களைக் கைதுசெய்யுமாறும் சவால் விடுத்ததாகத் தெரியவருகிறது.
இச்சம்பவம் தொடர்பில், ஹட்டன் நகரில் பொருத்தப்பட்டுள்ள சீசீடிவிக்களின் உதவியுடன், பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
46 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
3 hours ago