Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
R.Maheshwary / 2022 ஜூலை 14 , மு.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேஹ்ன் செனவிரத்ன
நபர் ஒருவரிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றைப் பெற்றுக்கொண்டு, பொலிஸ் சீரடையுடன் சென்று, குறித்த மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருளைப் பெற்றுக்கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு எதிராக பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த சந்தேகநபர் அலதெனிய பிரதேசத்திலுள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு பல தடவைகள் சென்று, பல தடவைகள் எரிபொருளைப் பெற்றுக்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இவ்வாறு எரிபொருள் நிரப்புவதற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற சந்தேகநபரின் செயற்பாடை அறிந்துக்கொண்ட வரிசையில் நின்ற பொதுமக்கள், அவரை சுற்றிவளைத்து தாக்கிய போது, அவர் மோட்டார் சைக்களையும் போட்டு விட்டு ஒடியுள்ளார்.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தின் பாதுகாப்பு கமெரா காணொளிகளுடன் உதவியுடன் சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .