Mayu / 2024 நவம்பர் 13 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த பொடிமெனிக்கே ரயில் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

புதன்கிழமை (13) ஒஹிய - இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையங்களுக்கிடையிலான பாதையில் பாரிய கற்கள் சரிந்து வீழ்ந்துள்ளமையினால் ரயில் சேவை தடைப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக ஒஹிய, இதல்கஸ்ஹின்ன நிலையங்களுக்கு இடையிலான ரயில் பாதையில் கற்கள் சரிந்து வீழ்ந்துள்ளதுடன், அதனை தொடர்ந்து கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரையிலான ரயில் இலக்கம் 1005 என்ற ரயில் நிறுத்தப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேவேளை, பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த 1596 என்ற சரக்கு ரயில் தற்போது இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
55 minute ago
1 hours ago
3 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago
3 hours ago
05 Nov 2025