2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

போக்குவரத்துகள் ஆரம்பிக்கப்பட்டன

Ilango Bharathy   / 2021 நவம்பர் 02 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

 மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை நேற்று முன்தினம் (31) அதிகாலை 4
மணிக்கு நீக்கப்பட்ட நிலையில், நேற்று (1) காலை முதல் மாகாணங்களுக்கிடையில் பொது போக்குவரத்து சேவையும் ஆரம்பமானது.

இதன்படி மலையகத்திலுள்ள பிரதான நகரங்களில் இருந்து கொழும்பு உட்பட
இதர பகுதிகளுக்கான பஸ் சேவை இடம்பெற்றது. நுவரெலியா - கொழும்பு, பதுளை - கொழும்பு, கம்பளை - கொழும்பு, பூண்டுலோயா - கொழும்பு, கண்டி - பதுளை, ஹட்டன் - இரத்தினபுரி உட்பட மேலும் பல பஸ் சேவைகள் இடம்பெற்றன.  

சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி பயணிகளை ஏற்றிச் செல்லும் நடைமுறையை தொடர்ந்து கடைபிடிக்குமாறு சுகாதாரத் தரப்பினர் அறிவுறுத்தியுள்ளனர். சுகாதார நடைமுறையை மீறும் பஸ்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X