2025 மே 03, சனிக்கிழமை

போடைஸில் வௌ்ளம் 50 குடும்பங்கள் பாதிப்பு

R.Maheshwary   / 2021 ஏப்ரல் 18 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா போடைஸ்  பகுதியில் நேற்று (17) மாலை பெய்த கடும்மழை காரணமாக, 50 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டனர்.

அத்தோடு ஹட்டன் -டயகம பிரதான வீதியின் போடைஸ் வீதியும் நீரில் மூழ்கியது. இதனால் பல மணி நேரம் அவ்வீதியினூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.

எனினும், பாதிக்கப்பட்ட பிரதேசத்துக்கு உடனடி விஜயத்தை மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், இந்நிலைமைகளை நேரடியாக பார்வையிட்டதுடன், மக்களின் கருத்துகளையும் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து, குறித்த ஆற்றினை அகலப்படுத்தி இப்பிரதேசத்திற்கு வெள்ளம் ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் இதன்போது உறுதியளித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X