Editorial / 2020 ஏப்ரல் 02 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
கொரோனா அச்சம் காரணமாக, டிக்கோயா போடைஸ் தோட்டத்தில், 05 குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர், இன்று முதல்(2) தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று, பொகவந்தலாவ பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
குறித்த தோட்டப் பகுதியில் உள்ள கிறிஸ்த்தவ ஆராதனை வீடொன்றுக்கு, இந்தியாவில் இருந்து மதபோதகர் ஒருவரை, அவிசாவலை
பகுதியில் உள்ள மதபோதகர், கடந்த மாதம் 11ஆம் திகதி அழைத்து வந்ததாகவும் அன்றைய தினம் இரவு, குறித்த வீட்டில் ஆராதனைகள் என்பன இடம்பெற்றதாகவும் தெரியவந்துள்ளது.
அத்துடன் மதபோதகர், 12ஆம் திகதி குறித்த வீட்டில் தங்கியிருந்து 13ஆம் திகதியே புறப்பட்டுச் சென்றுள்ளதாகவும் தெரியவருகிறது.
இது தொடர்பில் வழங்கப்பட்டத் தகவலுக்கு அமைவாக, ஆராதனையில் கலந்துகொண்ட குடும்ப உறுப்பினர்கள், 14 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளர் என்று, பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள், அயலவர்களுடன் எவ்விதத் தொடர்பையும் ஏற்படுத்தக்கூடாது என்று, வலியுறுத்தப்பட்டுள்ளது.


12 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago