Editorial / 2020 மார்ச் 29 , பி.ப. 06:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா, தரவளை பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்தின் மத போதகர் உட்பட 09 பேர் தேவாலயத்துக்குள்ளேயே நேற்று (28) முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் இருந்து வருகைதந்திருந்த மதபோதகர் ஒருவருடன் இணைந்து ஆராதனைக் கூட்டம் நடத்தியமை, யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டமை ஆகியவற்றாலேயே குறித்த மதபோதகரும், அவருடன் நெருங்கிப்பழகியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தமிழகம், திருநெல்வேலியிலிருந்து கடந்த 11ஆம் திகதி மதபோதகர் ஒருவர் இலங்கை வந்துள்ளார். அதன்பின்னர் தரவளை தேவாலயத்திலுள்ள மதபோதகர் அவரை ஹட்டனுக்கு அழைத்துவந்துள்ளார்.
12, 13, 14, 15ஆம் திகதிகளில் தரவளையில் ஆராதனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஒருநாள் கூட்டத்தில் சுமார் 60 பேர் வரை கலந்துகொண்டுள்ளனர்.
அதன்பின்னர், திருநெல்வேலி போதகரும், இவரும் யாழ்ப்பாணத்துக்குச் சென்று அங்கு 16, 17ஆம் திகதிகளில் ஆராதனைக் கூட்டங்களை நடத்தியுள்ளனர்.
வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தொடர்பில் தகவல்கள் வழங்குமாறு கோரப்பட்டிருந்த போதிலும் அந்த நடைமுறையை குறித்த போதகர் பின்பற்றவில்லை. தன்னை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.
இந்நிலையிலேயே, நேற்று முதல் அவரும் அவருடன் தொடர்பை பேணிய 8 பேரும் தேவாலயத்திலேயே தனிமைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆராதனைக் கூட்டங்களில் பங்கேற்றவர்கள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago