Kogilavani / 2021 மே 10 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
நோர்வூட் நகரில் மிக நீண்டகாலமாக மிகவும் சூட்சுமுமான முறையில் நடத்திச்செல்லப்பட்ட போதைப் பொருள் விற்பனை நிலையமொன்றை முற்றுகையிட்டுள்ள பொலிஸார், போதைப் பொருட்களுடன் மூவரை கைதுசெய்துள்ளனர்.
போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞன் உட்பட மேலும் மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நோர்வூட் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, மோப்ப நாயின் உதவியுடன் குறித்த நிலையத்தைச் சுற்றிவளைத்த பொலிஸார், மூவரை கைதுசெய்துள்ளனர்.
இதன்போது கேரளா கஞ்சா 150 கிராம், ஐஸ், ஹெரோயின் ஒரு கிராம், 14 லைட்டர்கள், 12 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம், இரண்டு அலைபேசிகள், உபகரணங்கள், போதைப் பொருள் பொதி செய்வதற்குப் பயன்படுத்தும் பொலித்தீன்கள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சுற்றிவளைப்பின் போது போதைப் பொருள் கொள்வனவு செய்வதற்காக வந்த ஓட்டோ சாரதி ஒருவர் உட்பட மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், ஓட்டோவும் கைப்பற்றப்பட்டுள்ளது.
அலைபேசி மூலமாகவே போதைப் பொருள் வர்த்தகம் முன்னெடுக்கப்பட்டு வந்ததாக, பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விற்பனையில் ஈடுபட்ட இளைஞன், நோர்வூட் பகுதியை சேர்ந்தவர் என்றும் இவர் கொழும்பிலிருந்து போதைப்பொருட்களைக் கொண்டு வந்து இங்குள்ள இளைஞர்கள் மற்றும் சாரதிகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளார் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

5 minute ago
25 minute ago
44 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
25 minute ago
44 minute ago
1 hours ago