Janu / 2026 மார்ச் 02 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
போதைப்பொருட்களுடன் சிவனொளிபாத மலைக்கு யாத்திரை வந்த ஆறு பேர் ஞாயிற்றுக்கிழமை (01) அன்று நல்லத்தண்ணி நகரில் வைத்து கைது செய்யப்பட்டதாக நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
சந்தேக நபர்கள் ஹட்டன் பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மொரட்டுவை, மாத்தறை, பயாகல, வங்காதெனிய, ஹக்மனை மற்றும் மீகொட ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 25 முதல் 33 வயதுக்குட்பட்டவர்களே இவ்வாறு கைது செய்ய்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து கஞ்சா, ஐஸ் (Ice) போதைப்பொருள், போதை மாத்திரைகள் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
சிவனொளிபாத மலைக்கு வரும் யாத்ரீகர்களில் சந்தேகத்திற்கிடமானவர்களை நல்லதண்ணி பொலிஸார் தொடர்ந்து தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செ.தி.பெருமாள்
16 minute ago
22 minute ago
26 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
22 minute ago
26 minute ago
56 minute ago