2025 ஜூலை 17, வியாழக்கிழமை

போதைப்பொருளுடன் நால்வர் கைது

Freelancer   / 2023 மே 23 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமு தனராஜா

பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மஸ்மடுவ பகுதியில் ஐஸ் போதைப்பொருள் தன் கைவசம் வைத்திருப்பதாக பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து உடன் ஸ்தானத்திற்கு விரைந்து சந்தேகத்திற்கு இடமான நபர்களை சோதனைக்கு உட்படுத்திய போது அவர்களிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் மற்றும் கஞ்சா ஆகியன மீட்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். 

அத்துடன் 19,25,26,35 வயதுடைய நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேக நபர்களை இன்றைய தினம் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X