2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

போதைப்பொருள் மாஃபியாக்களின் வலையில் சிக்கிவிடக்கூடாது

R.Maheshwary   / 2022 டிசெம்பர் 20 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

இன்று பாடசாலைகளில்  மாணவர்கள் மத்தியில்  போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளது பெரும் கவலைக்குரிய விடயம் என தெரிவித்த நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற எம்.ராமேஷ்வரன், இதற்கு நாம் நிச்சயம் முடிவு கட்ட வேண்டும் என்றார்.

அதற்காக எமது பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் அவர்கள் தலைமையில் அண்மையில் பொலிஸார் உள்ளிட்ட பொலிஸ் நிலைய பொதுப்பதிகாரிகள் பாதுகாப்பு தரப்பினர்கள், அதிபர்களை அழைத்து நாம் கூட்டம் ஒன்று நடத்தினோம்.

ஹட்டன் வலய அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான சந்திப்பும், கலந்துரையாடலும் ஹட்டன் ஹைலண்ஸ் கல்லுரி கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாடசாலைகளில் தேவையான சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் இதற்கான அனுமதியை ஆளுநர் ஊடாக பொலிஸாருக்கு பெற்று தரப்படும் எனவும் நாம் கூறியுள்ளோம் என்றார்.

எமது சமூகம் கல்வியால் மட்டுமே முன்னேற முடியும். எனவே இந்த போதைப்பொருள் மாப்பியாக்கள் போன்றவர்களின் வலையில் எமது சமுதாயம் சிக்கிவிடக்கூடாது என்பதுதான் எங்களுடைய ஏகோபித்த கோரிக்கையாக இருக்கின்றது அதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் நாம் நிச்சயம் மேற்கொள்வோம் என்றார்.

 கல்வியால் மட்டுமே மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அந்த இலக்கை அடைவதற்காகவே தற்போதைய சூழ்நிலையில் மலையக கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து பயணிக்கின்றன என்றார். 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .