2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

’போதையற்ற நாடு சௌபாக்கியமான நாடு’ எனும் வேலைத்திட்டம் ஆரம்பிப்பு

Kogilavani   / 2021 ஜனவரி 08 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் 'போதையற்ற நாடு சௌபாக்கியமான நாடு;' எனும் வேலைத்திட்டத்துக்கு அமைய, அரசாங்கத்தினால் அறிமுகப்படத்தப்பட்ட உடனடி அழைப்பு 1927  தொலைபேசி இலக்கம் மற்றும் ஆலோசனைகளை  உள்ளடக்கிய விளம்பர பத்திரிகைகளை இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு சப்ரகமுவ மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய உடனடி அழைப்பு 1927  தொலைபேசி இலக்கங்கள் உள்ளடக்கிய ஆலோசனை விளம்பர பத்திரிகைகளை, சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களுக்கு, இன்று (8) வழங்கி வைத்தார்.

இதன்போது பாதுகாப்பு அமைச்சின் சேகாலை மாவட்ட வெளி சேவை உதவியாளர் அருட்தந்தை எச்.பி.தொட்டவத்த மற்றும் பாதுகாப்பு அமைச்சின் இரத்தினபுரி மாவட்ட வெளி சேவை உதவியாளர் ஷானிக்கா அபேசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X