Janu / 2025 ஜூன் 17 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி குடிபோதையில், போக்குவரத்து விதிகளை மீறி பேருந்தை செலுத்திய தனியார் பேருந்தின் சாரதி ஒருவர் செவ்வாய்க்கிழமை (17) ஹல்துமுல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹல்துமுல்ல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த பேருந்தை ஹல்துமுல்ல நகரில் வைத்து நிறுத்தி சாரதியை சோதனையிட்டு அவரை ஹல்துமுல்ல மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளது. மேலும் சாரதி குடிபோதையில் இருந்தமை மருத்துவ அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்க்க, குறித்த பேருந்தை செலுத்துவதற்கு வேறு சாரதியை ஏற்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
39 minute ago
2 hours ago
6 hours ago
01 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
2 hours ago
6 hours ago
01 Apr 2026