மொஹொமட் ஆஸிக் / 2019 ஓகஸ்ட் 22 , பி.ப. 06:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹரிஸ்பத்துவ பிரதேச சபை எல்லைக்குள், போயா தினங்களிலும் ஞாயிற்றுக்கிழமைகளில், மாலை 2 மணி வரையிலும், தனியார் வகுப்புகளை நடத்துவதற்கு, தடை விதிக்க, ஹரிஸ்பத்துவ பிரதேச சபையில், இன்று (22) தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஹரிஸ்பத்துவ பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, நேற்று நடைபெற்றபோதே, இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.
ஹாரிஸ்பத்துவ பிரதேச சபையின் உப தலைவர் மெதகெதர விஜேசேகர தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் தனுஷ்ட மல்வெவ இப்பிரேரணை முன்வைத்திருந்தார்.
மதக்கல்வி, சரியான முறையில் முன்னெடுக்கப்படாததாலேயே, பல்வேறு குற்றச்செயல்கள் நாட்டில் இடம்பெற்று வருவதாகவும் போயா தினங்களிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், பௌத்த, இந்து, கிறிஸ்தவ மாணவர்களுக்கு வைக்கப்படும் அறநெறி வகுப்பில், மாணவர்கள் பங்கெடுக்கும் எண்ணிக்கை, மிகக்குறைவாகக் காணப்படுவதாகவும் இதன்போது அவர் தெரிவித்தார்.
சாதாரண தரப் பரீட்சையில் நிலவும் போட்டி காரணமாக, அனைத்து மாணவர்களும் தனியார் வகுப்புகளுக்குச் செல்வதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
எனவேதான், போயா, ஞாயிறு தினங்களில், 2 மணி வரை, தனியார் வகுப்புகளை நடத்துவதற்கு தடை விதிப்பதற்கு, பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
இந்நிலையில், இது தொடர்பாக பிரதேசத்திலுள்ள அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் எழுத்து மூலம் அறிவிக்கப்படும் என்றும் 2020ஆம் ஆண்டு அனுமதிப்பத்திரம் வழங்கும்போது, ஒரு நிபந்தனையாக முன்வைக்கப்படும் என்றும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
59 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago
4 hours ago