2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

போலி கையொப்பத்தை உறுதிபடுத்திய கிராம அலுவலர் கைது

Janu   / 2025 நவம்பர் 09 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொனராகலை,படல்கும்புரை பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு சொந்தமான காணி ஒன்றில் உள்ள மரங்களை வெட்டுவதற்காக குறித்த பெண்ணின் கையொப்பத்தை போலியாக இட்ட ஆவணத்தை உறுதிபடுத்திய குற்றச்சாட்டில் கிராம அலுவலர் ஒருவர் சனிக்கிழமை (08) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

முறைப்பாட்டாளரான பெண் 2017 ஆம் ஆண்டில் குறித்த பிரதேசத்தில்   இல்லாதபோது, ​​மரக்கடத்தல்காரர் மரங்களை வெட்ட அனுமதி பெறுவதற்காக வழங்கிய கடிதத்தில் உள்ள போலி கையொப்பத்தை கிராம அலுவலர் உறுதிபடுத்தி சான்றளித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

முறைப்பாட்டாளரான பெண் ஏற்கனவே இது தொடர்பாக படல்கும்புரை பிரதேசச் செயலாளர் மற்றும் படல்கும்புர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த போதும் அரசியல் அழுத்தம் காரணமாக எந்தவித விசாரணையும் நடத்தப்படவில்லை என  தெரியவந்துள்ளது.

 இந்த சம்பவம் தொடர்பாக தற்போதைய பொலிஸ்மா அதிபர்  பிரியந்த வீரசூரியவிடம் முறைப்பாடு செய்ததையடுத்து  குறித்த கிராம அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X