Editorial / 2020 ஜனவரி 31 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
போலி நாணயத்தாள்கள் நான்குடன் நபரொருவரை, மொனராகலைப் பொலிஸார், இன்று (31) கைது செய்துள்ளனர்.
மொனராகலை நகரின் தேசிய லொத்தர் சபையின் சுவீப் டிக்கட் விற்பனை நிலையமொன்றில், குறித்த நபர், சுவீப் டிக்கட்டுக்களை எடுத்துக்கொண்டு, நாணயத்தாளை வழங்கியுள்ளார்.
நாணயத்தாளைப் பெற்றுக்கொண்ட சுவீப் டிக்கட் விற்பனையாளர், அந் அந்தத் தாளில் மாற்றமொன்றைக் கண்டு, அது குறித்து, மொனராகலைப் பொலிஸாருக்கு இரகசியமாக அறிவித்தார்.
இதனையடுத்து, உடன் அவ்விடத்துக்கு வந்த பொலிஸார், சுவீப் டிக்கட்டுக்களை வாங்கிய நபரை பரிசீலனை செய்த போது, அவரிடமிருந்து இரு சுவீப் டிக்கட்டுகளும் போலி நாணயத்தாள்கள் மூன்றையும் மீட்டனர்.
ஐநூறு ரூபாய் ஒன்று, நூறு ரூபா இரண்டு, இருபது ரூபாய் ஒன்று என்ற வகையில், நான்கு போலி நாணயத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேற்படி நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
17 minute ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
4 hours ago
4 hours ago
5 hours ago