2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மாணவியை கடத்திச் சென்ற இளைஞன் கைது

Princiya Dixci   / 2017 மார்ச் 13 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன், மாணிக்கவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதான மாணவியை திருமணம் செய்வதாக கூறி, கடத்திச் சென்று பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய இளைஞனை ஹட்டன் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

தொலைபேசி மூலம் குறித்த சந்தேக நபருக்கும், பாடசாலை மாணவிக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 23ஆம் திகதி மாணவி காணாமல் போனதாக, அவரது பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அதனடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட பொலிஸார், சந்தேக நபர் மாணவியை நண்பர் ஒருவரின் வீட்டில் தங்க வைத்துவிட்டு, கொட்டக்கலை பிரதேசத்தில் தலைமறைவாக இருந்தமையை கண்டறியப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், சந்தேக நபரையும், அவருக்கு உதவியாக இருந்த நண்பர்களையும் இன்று பொலிஸார் கைது செய்துள்ளனர்

சந்தேக நபர் குறித்த மாணவியை சில வெளியிடங்களுக்கு கூட்டிச்சென்று  துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக ,பொலிஸாரின் விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .