Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 ஏப்ரல் 10 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஸ்கெலியா, காட்மோர் தோட்டம், காட்மோர் பாடசாலைக்குச் சொந்தமான விளையாட்டு மைதானத்தில், வீட்டுத் திட்டம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரதேச மக்கள், ஞாயிற்றுக்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
காட்மோர் தோட்டமானது, 5 பிரிவுகளைக் கொண்டது. இத்தோட்ட பிரிவுகளின் ஒன்றான டிவிஎஸ் தோட்டத்தின் ஒரு பகுதி, ரோஸ் பீல்ட் தோட்ட நிர்வாகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
ரோஸ் பீல்ட் நிர்வாகத்துக்கு உள்ளேயே, காட்மோர் பாடசாலையின் மைதானம் அமைந்துள்ளதாக தெரிவித்து, இம்மைதானத்தில் வீடுகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பிரதேச மக்கள், ஞாயிற்றுக்கிழமை கவனயீர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதோடு, இவ்விடயத்தை, டிவிஎஸ் தோட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கும் கொண்டுச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து, பொலிஸார் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள், சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டதுடன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டனர்.
இருப்பினும் டிவிஎஸ் நிர்வாகம், தாம் எந்தவொரு நிலப்பகுதியையும் விற்பனை செய்யவில்லை என்று தெரிவித்த அதேவேளை, எதிர்வரும் 20ஆம் திகதி, இது தொடர்பிலான பேச்சுவார்ததைக்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளது.
தமக்கு உரிய தீர்வு கிடைக்காதபட்சத்தில் அடுத்தக் கட்ட நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக, தோட்ட மக்கள் தெரிவித்தனர்.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago