Kogilavani / 2015 செப்டெம்பர் 03 , மு.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

-இக்பால் அலி
'இலங்கையை இன முரண்பாடற்ற நாடாக மாற்றியமைக்க வேண்டுமாயின் அக்கருதுகோள், பாடசாலை மட்டத்திலிருந்து கட்டியெழுப்பப்பட வேண்டும்' என ஜப்பானிலுள்ள ஒக்கினெவ பல்கலைக்கழகத்தின் சர்வதேச தொடர்பாடல் துறைப் போராசிரியர் கலாநிதி திலீப் சந்திரலால் தெரிவித்தார்.
'ஜப்பான் போன்ற நாடுகள், பொருளாதார அபிவிருத்தித் துறையில் முன்னணிமிக்க நாடாகத் திகழ்வதற்கு மக்களிடையே காணப்படும் ஒற்றுமையே முதற்காரணம்' என்றும் அவர் கூறினார்.
'எமது மாணவர்களின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்' என்ற தொனிப்பொருளில் குருநாகல் நகர் இஸ்லாமிய வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டிலும் ஒகினவா இலங்கை ஜப்பான் நட்புறவு சங்கத்தின் அனுசரணையிலும் நடைபெற்ற பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.
இப்பயிற்சிப் பட்டறை, குருநாகல் நகர மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை(01) நடைபெற்றது. இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
'ஜப்பான் நாட்டு மாணவர்கள், அறிவு விருத்தியில் மிக உன்னதமான இடத்தில் உள்ளனர்;. எதையும் விவேகத்துடனும் வேகத்துடனும் சிந்தித்து திறன்படச் செய்யக் கூடியவர்கள். ஒழுக்க பன்பு விடயத்தில் சிறந்த பேணுதல்களை அவர்களிடத்திலே இயல்பாகக் காண முடியும்.
'தற்போது எமது நாட்டில் நல்ல நிலைமை உருவாகியுள்ளது. இந்த மாற்றத்துடன் எமது வளங்களைப் பயன்படுத்தி, உலகில் மதிக்கப்படும் முன்னணிமிக்க நாடாக இலங்கையை மாற்றுவதற்கு, பாடசாலை மட்டத்திலே புதிய பயிற்சிகள் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்' என அவர் கூறினார்.


1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago