2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மின்மாற்றிகளை பாதுகாக்குமாறு எச்சரிக்கை

Kogilavani   / 2017 ஏப்ரல் 07 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆ.ரமேஸ்

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படவில்லை என்றால் இன்று மின்சார தடையினை மேற்கொள்ள வாய்ப்பு இருப்பதாக, நுவரெலியா மின்சார சபை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியா, கந்தப்பளை, இராகலை, உடப்புஸ்ஸலாவை, தலவாக்கலை, கொட்டக்கலை, ஹட்டன்,பூண்டுலோயா, டயகமை போன்ற பகுதிகளிலுள்ள மின் மாற்றிகளை (Transformers) பாதுகாத்துக்​ கொள்ளுமாறு அப்பிரதேசங்களிலுள்ள தோட்ட அதிகாரிகள் மற்றும் காவலாளிகளுக்கு பொலிஸாரால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில், எச்சரிக்கை விடுக்குமாறு பொலிஸ் தலைமையகம் ​இன்று (07) அறிக்கை வெளியிட்டுள்ளது அதனடிப்படையிலேயே, நுவரெலியா மாவட்டத்தில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக, நுவரெலியா மற்றும் கந்தப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .