Niroshini / 2016 ஏப்ரல் 30 , மு.ப. 08:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கணேசன், ஆ.ரமேஷ்
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரதல்ல கீழ்பிரிவு தோட்டத்தில் மூன்று வீடுகளில் ஆடைகள், பித்தளை உபகரணங்கள் போன்றவற்றை களவாடிய 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை நானுஓயா பொலிஸார் நேற்று மாலை கைதுசெய்துள்ளனர்.
அதே தோட்டத்தைச் சேர்ந்த குறித்த பெண் தொடர்ந்தும் இவ்வாறான களவாடும் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று மாலை இப்பெண் மேற்படி தோட்டத்தில் தொழிலாளர்களின் குடியிருப்பில் நுழைந்து தனது கைவரிசையை காட்டியுள்ளார்.
இதுதொடர்பில் நானுஓயா பொலிஸாருக்கு தகவலை வழங்கியதையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் இப்பெண்ணை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணை இன்று மாலை நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago