2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மூவருக்கு எதிராக வழக்கு

Kogilavani   / 2017 ஏப்ரல் 09 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், மு.இராமச்சந்திரன்

நல்லதண்ணி நகர வர்த்தக நிலையங்களில், சனிக்கிழைமை மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின்போது, நுகர்வோர் பயன்பாட்டுக்கு உசித்தமற்ற பொருட்களை விற்பனை செய்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ், மூன்று வர்த்தக நிலையங்களுக்கு எதிராக, வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக நுவரெலியா மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, சில வர்த்தக நிலையங்களுக்கு, நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் கூறினர்.

சிவனொலிபாதமலைக்கு வரும் யாத்திரிகளின் நலன்கருதி, நுவரெலியா மாவட்ட மற்றும் மஸ்கெலியா சுகாதார பரிசோதகர்கள் இணைந்து இத்திடீர் சோதனையை மேற்கொண்டனர்.

யாத்திரிகர்களுக்கு சுகாதாரமான, தரமான உணவுப் பொருட்களை வழங்கும் நோக்கில்? தொடர்ச்சியான சோதணை நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் மேலும் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .