Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Sudharshini / 2015 நவம்பர் 01 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ள பதுளை, வார்வீக் தோட்ட மக்களைப் பாதுகாப்பான இடமொன்றில் குடியமர்த்துவது தொடர்பிலான ஆராயும் விசேட பேச்சுவார்த்தை நாளை (2) பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது.
வார்வீக் பெருந்தோட்டத்தில்; மண்சரிவு மற்றும் நிலம் தாழிறங்கும் அபாயம் காணப்படுவதால், இத்தோட்டத்தைச் சேர்ந்த 19 குடும்பங்கள் ஏற்கெனவே வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் 80 குடும்பங்களை அங்கிருந்து வெளியேறுமாறு பதுளை மாவட்ட இடர் முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் ஈ.எல்.எம். உதயகுமார மற்றும் வெலிமடை பிரதேச செயலாளர் ஆகியோர் பணித்துள்ளனர்.
எனினும் மேற்படி 80 குடும்பங்களில் 8 குடும்பங்கள் அவ்வுத்தரவை நிராகரித்து அக்குடியிருப்புகளிலே தொடர்ந்தும் வசித்து வருகின்றனர்.
'குடியிருப்புகளை விட்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேறுமாறு பணித்தால்;, எம்மால் எங்கு போகமுடியும்? பாதுகாப்பான இடங்களில் அரச அதிகாரிகளே எங்களை குடியமர்த்த வேண்டும். அவ்வாறு குடியமர்த்தாவிடின் இங்கே செத்துமடிவோமே தவிர வேறு எங்கும் எங்களால் போக முடியாதென்று' அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே, வார்வீக் தமிழ் வித்தியாலயத்தில் 19 குடும்பங்களைச் சேர்ந்த 98 பேர் தஞ்சம் அடைந்துள்ளனர். பாடசாலையிலும் போதிய வசதிகளின்றியே அவர்கள் இருந்து வருகின்றனர்.
இந்நிலையைக் கருத்திற்கொண்டு இம்மக்களைப் பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துவது தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளதாகத் தெரியவருகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
50 minute ago
59 minute ago
59 minute ago