2026 மே 01, வெள்ளிக்கிழமை

மகஜர் கையளிப்பு...

Editorial   / 2018 நவம்பர் 11 , பி.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, 1,000 ரூபாய் அடிப்படைச் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, பொகவந்தலாவ நகரிலிருந்து கொழும்புக்கு பாதயாத்திரையை, அண்மையில் மேற்கொண்டிருந்த ஜேசுதாஸ் தலைமையிலான குழுவினர், 17 அம்சக்கோரிக்கைகள் அடங்கிய மகஜரை, பலவேறு தரப்பினரிடம் கையளித்துள்ளனர்.   

ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க, இந்தியா, பிரித்தானியா, வத்திக்கான் ஆகிய உயர்ஸ்தானிகராலயங்கள், தொழில் திணைக்களம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இந்து மத குரு பீடம், இஸ்லாமிய தலைமை மத குரு, கொழும்பு அருட்திரு ஆண்டகை, முன்னாள் எதிர்கட்சித் தலைவர், நாகவிகாரை பீடாதிபதி, ஐக்கிய இராச்சிய அலுவலகம் ஆகியவற்றில், தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜைரைக் கையளித்துள்ளனர்.  

அத்துடன் இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட மேற்குறிப்பிட்ட நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், இவ்விடயம் தொடர்பில் உயர்மட்ட அதிகாரிகளுக்கு அறிவித்து, சிறந்த பதிலைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்துள்ளனர் என்றும், குறிப்பாக மலையகத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில், இந்தியாவும், பிரித்தானியாவும் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் ஜேசுதாஸ் மேலும் தெரிவித்தார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .