2025 ஜூலை 05, சனிக்கிழமை

மகனை கொல்ல முயன்ற தாய்க்கு விளக்கமறியல்

Kogilavani   / 2015 நவம்பர் 06 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆறு வயதுடைய தனது மகனை, ரயிலின் முன் தள்ளிவிட்டு கொலை செய்ய முயன்ற பெண்ணை, எதிர்வரும் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி நீதவான் நீதிமன்ற நீதவான் வசந்த குமார, நேற்று(5) உத்தரவிட்டார்.

கண்டியிலிருந்து மாத்தளையை நோக்கி சென்றுக்கொண்டிருந்த ரயிலுக்கே, கண்;டி பொலிஸ் நிலையத்துக்கு அண்மையில் உள்ள ரயில் கடவைக்கு அருகில் வைத்து அத்தாய், இந்த கொடூரமான காரியத்தை புதன்கிழமை காலை 7.15க்கு செய்வதற்கு முயன்றார். தாயொருவர் சிறுவனொருவனை இழுத்துப்பிடித்து ரயிலுக்கு தள்ளிவிடுவதற்கு முயன்றதை  அவதானித்த கண்டி பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த பெண் பொலிஸ் அதிகாரி, அவனைக் காப்பாற்றியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .