2025 மே 19, திங்கட்கிழமை

மகனது மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத தந்தையும் மரணம்

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 11 , பி.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷேன் செனவிரத்ன

55 வயதுடைய திருமணமாகாத தனது மகன் விபத்தில் உயிரிழந்ததை கேள்வியுற்ற எண்பத்தைந்து வயதுடைய தந்தை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பேராதனை பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது.

உடபேரதெனிய பகுதியைச் சேர்ந்த சுப்பையா முதுபண்டா (வயது 55) என்பவர் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்ததாகவும், அவரது தந்தை அருணாசலம் சுப்பையா (84) அன்றைய தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.

இறந்தவர் தனது சகோதரி வீட்டில் தங்கியிருந்ததாகவும், அவர் எப்போதும் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் அவரது சகோதரி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். 08ஆம் திகதி வெளியில் செல்வதாகச் சொல்லிவிட்டுச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

பல இடங்களில் தேடியும் அவர் தொடர்பில் தகவல் கிடைக்காத நிலையில், அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மகன் இறந்ததை அறிந்த அவரது தந்தை, அன்றைய தினம் வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X