Janu / 2024 செப்டெம்பர் 01 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிநாட்டில் உள்ள தனது மனைவி அனுப்பும் பணம் போதாது எனவும் மனைவியின் பெற்றோருக்கு வழங்கும் பணமும் தனக்கே தர வேண்டும் என கூறியும் , 05 வயதுடைய தனது மகளை கொடுமை படுத்திய தந்தை ஒருவர் தெனியாய பொலிஸாரால் சனிக்கிழமை (31) கைது செய்யப்பட்டுள்ளார்.
தெனியாய பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் .
பாதிக்கப்பட்ட சிறுமி சந்தேக நபரின் இரண்டாவது மனைவியின் மகள் எனவும் சிறுமியின் தலைமுடியைப் பிடித்து அவரை தாக்கியது காணொளியாக பதிவு செய்து வெளிநாட்டில் பணிபுரியும் மனைவிக்கு அனுப்பிவைத்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது .
தனது மகள் தாக்கப்படும் காணொளியை பார்த்த பெண் இது தொடர்பில் நாகொட பிரதேசத்தை சேர்ந்த தனது தாயாருக்கு தகவல் வழங்கி , தெனியாய பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெனியாய பிரதான பொலிஸ் பரிசோதகர் சந்தன அமரரத்ன தெரிவித்தார்.
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025