Editorial / 2019 மார்ச் 07 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}






எஸ்.சதீஸ்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பொகவந்தலாவ லெச்சுமி தோட்டம் மத்தியப் பிரிவில் தொழில்புரியும் பெண் தொழிலாளர்களுக்கான கொழுந்து பறிக்கும் போட்டி, நேற்று (6) காலை நடத்தப்பட்டது.
]“ஏ”, “பி” ஆகிய இரு பிரிவுகளுக்கு இடையே நடத்தப்பட்டப் போட்டியில், 16 போட்டியாளர்கள் பங்குபற்றியுள்ளனர்.
போட்டியின் நடுவர்களாகவும் அதிதிகளாகவும் தோட்ட உதவி
முகாமையாளர் கயந்த வித்தானகே, நோர்வூட் பிரதேசசபையின் உறுப்பினர் மாடசாமி சரோஜா, வெளிக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.
“ஏ” பிரிவில் முதல் மூன்று இடங்களை முறையே, ஜெஸ்லியம்மா, ஜெயந்தி, ஆலோம்மா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
“பி” பிரிவில் கனகேஸ்வரி, சீதையம்மா, சந்தமாலி ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பெற்றுக்கொண்டனர்.
போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கானப் பரிசளிப்பு நிகழ்வு, எதிர்வரும் 11ஆம் திகதி, பொகவந்தலாவ லெச்சுமி தோட்ட விளையாட்டு மைதானத்தில் நடத்தப்படவுள்ளது.
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago