Editorial / 2019 மார்ச் 08 , பி.ப. 01:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
மஸ்கெலியா சைவ மங்கையர் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யபட்ட சிறப்பு ஒன்றுகூடல், ஸ்ரீ சண்முகநாத சுவாமி தேவஸ்தான மண்டபத்தில், சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு நடைபெற்றது.
திருமதி சகுந்தலா செல்வரட்ணம் அம்மையாரின் வழிகாட்டல் ஆலோசனையின் கீழ், தலைவி திருமதி வி.விஜியலட்சுமியின் தலைமையில் நடைபெற்ற ஒன்றுகூடலில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகெபாண்டனர்.
ஒன்றுகூடலின்போது பெண்களின் சுகாதாரம் பற்றியும் பிள்ளைகளின் பாதுகாப்பு பற்றியும், போதைப் பொருள் பாவனையை இல்லாதொழித்தல் மற்றும் பெண்களின் உடல், உள, ஆன்மீக ரீதியான பயிற்சி போன்றவை தொடர்பாக எடுத்தியம்பிய அதேவேளை, பெண்களுக்கான உரிமைப் பற்றியும் ஒவ்வொரு வருடமும் மகளிருக்கான தினமாக இந்நாளை அனுஷ்டிப்பதற்கான காரணம் பற்றியும் கலந்துரையாடபட்டது.
மேலும் மகளிர் தினத்தையொட்டி, மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாத சுவாமி தேவஸ்தான மண்டபத்தில், நாளை (9) நடைபெறவுள்ள நிகழ்வில் பங்கேற்கவுள்ள பெண்களுக்கு, நினைவுப் பரிசில்கள் வழங்கபட உள்ளதெனவும் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
3 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago