Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 29 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீலமேகம் பிரசாந்த்
மலையக மக்களின் பிரச்சனைகளை இனங்கண்டு அதற்கான முழுமையான தீர்வுகளை வழங்குவதற்கு மலையக மக்கள் முன்னணி என்றும் தயாராக இருப்பதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
மலையக மக்கள் முன்னணியின் நிர்வாக குழு கூட்டம் தலவாக்கலை கட்சி காரியாலயத்தில் நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
அதாவது மலையக மக்களின் பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. வாழ்வாதார பிரச்சனைகளாக இருக்கட்டும் அதேபோல தொழிற்சங்க ரீதியிலான பிரச்சனைகளாக இருக்கட்டும் அவற்றை உடனடியாகத் தீர்க்க மலையக மக்கள் முன்னணியும் அதன் ஊழிர்களும் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் மலையகத்தில் பல இடங்களில் கட்சி காரியாலயங்கள் விஸ்தரிக்கப்பட்டு வருகின்றன. நுவரெலியா மாவட்டம் உட்பட முழு மத்திய மாகாணத்திலும் அதேபோல ஊவா மாகாணம் முழுவதிலும் மக்களின் குறைகளை கேட்டு உடன் தீர்வு வழங்குவதற்கான காரியாலயங்களும் அதேபோல விசேட குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன.
எனவே மக்கள் எந்நேரமும் மலையக மக்கள் முன்னணியோடு இணைந்து தங்கள் பிரச்சனைகளுக்கான தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும் .மக்களுக்கான கதவு எப்போதும் திறந்தே காணப்படுமென அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
2 hours ago
18 May 2025