R.Maheshwary / 2021 நவம்பர் 19 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரும் மக்கள் கவிமணி என்று போற்றப்படுகின்ற இலக்கியவாதியுமான சி.வி. வேலுப்பிள்ளையின் 37ஆவது நினைவு தினம், 19ஆம் திகதி தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச்செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.
இந்த நினைவு தினம் அனுஷ்டிப்பு தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்தின் ஆலோசனைக்கேற்ப ஒவ்வொரு வருடமும் மக்கள் கவிமணி சி. வி வேலுப்பிள்ளையின் நினைவு தினம் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
மடக்கும்புர தோட்டத்திலுள்ள சி.வி வேலுப்பிள்ளையின் சமாதியில் அன்னாருக்கு
அஞ்சலி செலுத்துவதோடு தோட்ட ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெறுவது வழமையாகும்.
அதற்கேற்ப இன்று 19 ஆம் திகதி காலை 10 மணிக்கு
மக்கள் கவிமணி சி .வி வேலுப்பிள்ளையின் நினைவு தின நிகழ்வு மடக்கும்புர தோட்டத்தில் உள்ள அன்னாரின் சமாதி வளாகத்தில் இடம் பெற உள்ளது.
இந்த நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணி என்பனவற்றை முக்கியஸ்தர்களும் மக்கள் பிரதிநிதிகளும் அமைப்பாளர்களும் இணைப்பாளர்களும் மாவட்ட தலைவர்களும் தோட்டத் தலைவர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொள்ள உள்ளனர் இன்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளர் சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026