2025 மே 01, வியாழக்கிழமை

மடுல்சீம கொலை; மேலுமொருவர் கைது

Janu   / 2024 ஒக்டோபர் 15 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹாலி எல ரொசெட்வத்த பிரதேசத்தை சேர்ந்த விவேகானந்தன் சுஜீவன்  என்ற முச்சக்கரவண்டி சாரதியை அடித்துக் கொன்று, சடலத்தை, மடுல்சீம உலக முடிவில் இருந்து பள்ளத்திற்கு வீசிய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் வாகன தரகர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (15) கைது செய்யப்பட்டதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர். .

மடுல்சீம, படாவத்தை பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவரே ( 27 வயது ) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வீசப்பட்ட இளைஞனின் சடலத்தை செவ்வாய்க்கிழமை (15) பிற்பகல் வரையிலும் கண்டுபிடிக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவத்தின் சந்தேகநபராகக் கூறப்படும் மடுல்சீம படாவத்தையைச் 34 வயதுடைய சந்திர போஸ் தயாளன் என்ற நபரை சந்தேகத்தின் பேரில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .