2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

மண்சரிவு: 15 பேர் பாதிப்பு

Sudharshini   / 2015 டிசெம்பர் 16 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெரகல - கொஸ்லந்தை வீதியின் 194ஆம் மைகல் அருகே அமைந்துள்ள, லேனா தோட்டத்தில்  நேற்று (15) மாலை இடம்பெற்ற மண்சரிவில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மண் சரிந்து வருவதை கண்டவுடன் அம்மக்கள் அங்கிருந்து வெளியேறியமையால், யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

ஆனால், கற்பாறைகளுடன் மண் மேடு சரிந்து வந்து வீடுகளின் மீது வீழ்ந்துள்ளது.

மேற்படி 3 குடும்பங்களும் உறவினர்கள் வீட்டில் தங்கியுள்ளனர். எனினும், இவர்களுக்கான எவ்வித நிவாரண உதவியும் இதுவரை கிடைக்க வில்லை என தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .