Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2015 நவம்பர் 06 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சுஜிதா
மலையகத்தில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் உப தலைவர் சிவானந்தன் ஆகியோர் இன்று(6) நேரடியாக சென்று பார்வையிட்டார்.
மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் ப.திகாம்பரத்தின் வேண்டுகோளின் பேரில் இவ்விஜயத்தை மேற்கொண்டார்.
இதன்போது டயகம போர்ட்மோர் தோட்டத்தில் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள 20 குடும்பங்களின் நிலைமை குறித்து ஆராயப்பட்டதோடு இவர்களுக்கு புதிய வீடுகளை அமைப்பது தொடர்பாக உரிய நிலத்தை பெற்றுக்கொடுப்பதற்கு போர்ட்மோர் தோட்ட முகாமையாளருடன் பேச்சுவார்த்தை ஒன்று நடத்தப்பட்டது. இம்மக்களுக்கு தோட்ட முகாமையாளர் உரிய நிலத்தை பெற்றுத்தருவதாக உறுதியளித்துள்ளார்.
அக்கரப்பத்தனை பென்கட்டன் (சின்ன தோட்டம்) தோட்டத்தில் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள 12 குடும்பங்கள் குறித்து நுவரெலிய பிரதேச செயலகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது மேலும், லிந்துலை கலிடோனியா தோட்ட மாடி வீட்டு குடியிருப்பு பகுதிகளும் பல்வேறு இடங்களில் மதில்கள் சரிந்துள்ளமை தொடர்பில் அன்ரத்த முகாமைத்துவ நிலையததுக்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அக்கரப்பத்தனை நகரின் போபத்தலாவ வீதியில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட கடைத்தொகுதியிலுள்ள மண்மேட்டை அகற்றுவதற்கு நுவரெலிய பிரதேச சபை ஆணையாளரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இந்தப் பாதிப்புகள் தொடர்பாக அமைச்சர் திகாம்பரத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago