செ.தி.பெருமாள் / 2019 செப்டெம்பர் 17 , பி.ப. 07:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஸ்கெலியா- சாமிமலை, பெயலோன் தோட்டம், சின்ன சூரியகந்தை பகுதியிலுள்ள தோட்டக் குடியிருப்பின் மீது, மண்திட்டு சரிந்து விழுந்ததால், 6 குடும்பங்களைச் சேர்ந்த 36 பேர் நிர்கதிக்கு உள்ளாகியுள்ளனர் என்று, அப்பகுதிக்குப் பொறுப்பான கிராம சேவகர் எஸ். சுரேஸ் தெரிவித்தார்.
இவர்களில் பாடசாலை மாணவர்கள் 16 பேர் உள்ளடங்குகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
இப்பகுதியில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக, இந்த மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்டுள்ளது என்றும் இப்பகுதியில், 2017ஆம் ஆண்டும் இவ்வாறான நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்த கிராமசேவகர், இப்பகுதியை, கட்டட ஆராய்ச்சி நிலையத்தின் அதிகாரிகள் வந்து பார்வையிட உள்ளனர் என்றும் தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்கு, இராணுவத்தினர், மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பண்டார சென்று பார்வையிட்டுள்ளார்.
அனர்த்தத்துக்கு உள்ளாகியுள்ளோர், இரவு வேளையில் மட்டும், உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago