Editorial / 2023 நவம்பர் 22 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

பேராதனை நகரில் மண்சரிவில் உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாயகிய பிரதேசத்தில் தொலைபேசி சேவை நிலையத்தை நடத்தி வந்த திருமணமாகாத அனுர ஜயவீர (வயது 68) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று (22) அதிகாலை 12.20 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளுடன் இராணுவ அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது உயிரிழந்தவரின் சடலம் அதிகாலை 5.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.
பேராதனை நகரில் சுமார் நான்கு வர்த்தக நிலையங்கள் மண்சரிவினால் அழிந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago