2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

மண்சரிவு அபாயம்; ஐந்து குடும்பங்கள் இடம்பெயர்வு

R.Tharaniya   / 2025 நவம்பர் 23 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி மாவட்டத்தில் கொலன்ன பிரதேச செயலகத்திற்கு உட்பட்டஹேயஸ் தோட்டத்தில் (Hayes Estate) சனிக்கிழமை (22) அன்று மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. 

தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாகவே இவ் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

மண்சரிவில் பாதிக்கப்பட்ட ஐந்து குடும்பங்கள் ஹேயஸ் தோட்டத்தில்(Hayes Estate) அமைந்துள்ள பிரஜா சக்தி நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர். 

மேற்படி தஞ்சமடைந்துள்ளஐந்து குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை தோட்ட நிர்வாகம் , கொலன்ன பொலிஸார் , ஹேயஸ் தோட்ட பிரஜா சக்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர் உட்பட தோட்ட மக்களும் செய்து வருகின்றனர். 

மேற்படி மண்சரிவு அபாயம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மாற்று நடவடிக்கைகளை முன்னெடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X