R.Maheshwary / 2021 நவம்பர் 16 , மு.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
கொத்மலை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கொத்மலை- கொட்டகஹபிட்டிய கிராமத்தில் மண்சரிவு ஏற்படக் கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளதால், குறித்த கிராமத்தைச் சேர்ந்த 20 குடும்பங்கள் தற்காலிகமாக அவர்களது உறவினர்கள் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என, நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரஞ்சித் அலஹகோன் தெரிவித்துள்ளார்.
கொத்மலை பிரதேச செயலாளர், கொத்மலை இராணுவ முகாமின் கட்டளையிடும் அதிகாரி உள்ளிட்டவர்கள் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கிராமத்துக்கு கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டதாகவும் இதன்போது, அந்த கிராமத்தின் பல இடங்கள், வீடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
கொத்மலை நீர்த்தேக்கத்தின் மேல் பகுதியில் அமைந்துள்ள குறித்த கிராமத்தில் 60 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், அக்கிராமம் மண்சரிவு ஏற்படும் ஆபத்துள்ள கிராமமாக அடையாளம் காணப்பட்டிருந்தாலும், இதுவரை அக்குடும்பங்களை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை தேசிய கட்ட்ட ஆய்வு நிலைய அதிகாரிகள், குறித்த கிராமத்துக்குச் சென்று ஆய்வுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago