2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மண்ணெண்ணெய் வரிசையிலும் அமைதியின்மை

R.Maheshwary   / 2022 ஜூன் 23 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

ஹட்டன் நகரிலுள்ள சிபெட்கோ எரிபொருள் நிலையத்துக்கு அருகில் இன்று அதிகாலை தொடக்கம் காணப்பட்ட மண்ணெண்ணெய்க்கான வரிசையிலும் இன்று காலை அமைதியின்மை ஏற்பட்டது.

நுகர்வோருக்கு மண்ணெண்ணெய் வழங்கும் முறை தொடர்பில் ஹட்டன் பிரதேச கிராம உத்தியோகத்தர்களால் நேற்றைய தினம் (22) அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் மண்ணெண்ணெய் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அதிகாலை 3 மணி தொடக்கம் நீண்ட வரிசைகளில் காத்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படுமா என வரிசைகளில் நின்றவர்கள் பல தடவைகள், எரிபொருள் நிரப்பும் பணியாளர்களிடம் வினவியபோதும் அவர்கள் எவ்வித பதிலையும் வழங்காத்தால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

எனினும் சில மணித்தியாலங்களுக்கு பின்னர், எரிபொருள் நிரப்பு பணியாளர்கள் இன்று மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படாது என அறிவிப்பு பலகையை காட்சிப்படுத்திய பின்னரே வரிசையில் நின்றவர்கள் கலைந்து சென்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X