2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மண்திட்டுச் சரிந்ததில் வீடு சேதம்

Editorial   / 2018 ஏப்ரல் 03 , பி.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், ரஞ்சித் ராஜபக்ஷ

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் - வில்பிரட்புரம் பகுதியில், மண்திட்டுடன் கட்டடம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில், வீடு ஒன்று சேதமடைந்துள்ளது.

இச்சம்பவம், நேற்று (02) இரவு 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதென, பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் கட்டடம் இடிந்து விழும் போது, வீட்டில் நான்கு பேர் உறங்கிக் கொண்டிருந்தனர் எனவும், அவர்கள் தெய்வாதீனமாக உயிர்தப்பினர் எனவும், எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும், பொலிஸார் தெரிவித்தனர்..

மண்திட்டுச் சரிந்ததன் காரணமாக, வீட்டின் இரண்டு அறைகளுக்கு, பகுதியளவில் சேதமேற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, ஹட்டன் பொலிஸாருக்கும் கிராம சேவகருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதென, வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.

இப்பிரதேசத்தில், மாலை வேளையில் மழை பெய்து வருவதாலேயே, இந்த மண்திட்டுச் சரிந்து வீழ்ந்துள்ளதெனத் தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X