2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

மண்மேடு சரிந்ததில் ஒருவர் பலி; ஒருவர் படுகாயம்

Kogilavani   / 2021 ஜனவரி 26 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேன் செனவிரத்ன

கண்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெஹியன்வெல நாகஸ்தென்ன பிரதேசத்தில், வீடொன்றுக்கு மதில்சுவர் அமைப்பதற்காக அத்திபாரம் இடும் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில், 65 வயது நபர் உயிரிழந்துள்ளதோடு மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த டீ.எஸ்.பத்மசிறி (65) என்பவரே உயிரிழந்துள்ளார்.

மண்மேடு சரிந்து விழுந்தபோது ஒருவர் சொற்ப நொடியில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மற்றுமொருவரை மீட்கும் பணி தாமதமாகியதாகவும் எனினும் அவர் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார் என்றும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

பிரேதப் பரிசோதனைக்காக கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X