Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 04 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். கணேசன், துவாரக்ஷன்
நானுஓயா நகரத்திற்கு அண்மித்த பகுதியில் இன்று காலை பாரிய மண்சரிவு திடீரென ஏற்பட்டதால் நுவரெலியா – தலவாக்கலை, நுவரெலியா – ஹட்டன், நுவரெலியா – டயகம போன்ற பிரதேசங்களுக்குச் செல்லும் போக்குவரத்துகள் முற்றாக பாதிக்கப்பட்டன
இதனால் சுமார் இரண்டு மணித்தியாலயங்கள் அவ்வீதியினூடான போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமாகியிருந்தன.
இதனையடுத்து, நுவரெலியா வீதி அதிகார சபை ஊழியர்கள், நு வரெலியா நானுஓயா பொலிஸார் இணைந்து மண்மேட்டை அப்புறப்படுத்தியுள்ளனர்.
இதனால் தற்போது அப்பகுதியில் ஒரு வழி போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படுகின்றது. அத்தோடு, இவ்வீதிகளில் பல இடங்களில் ஆங்காங்கே மண்மேடுகள் சரிந்து விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வீதிகளின் ஊடாக வாகனங்களை செலுத்தும் சாரதிகள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago