Editorial / 2023 ஒக்டோபர் 15 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொகவந்தலாவை, தெரேசியா தோட்டத்திலுள்ள லயன் குடியிருப்பு தொகுதியொன்றில் பின் புறத்தில் ஞாயிற்றுக்கிழமை (15) மண்மேடு சரிந்து விழுந்ததில் ஐந்து குடியிருப்புக்கள் முற்றாக சேதமடைந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் நிமல் பண்டார தெரிவித்தார்.
தெரேசியா தோட்டத்திலுள்ள முதலாம் லயன் குடியிருப்பு தொகுதியொன்றில் ஐந்து குடியிருப்புகளின் பின்பகுதியில் இந்த மேடுகள் சரிந்து விழுந்துள்ளன, குடியிருப்புகளின் பின்பகுதியில்தான் சமயலறைகள் அமைந்துள்ளன.
பாதிப்படைந்த குடியிருப்புகளில் வசித்த ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் அத்தோட்டத்தின் மற்றுமொரு பாதுகாப்பான கட்டிடத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், குடியிருப்புக்களின் மீது வீழ்ந்துள்ள மண்மேடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொகவந்தலாவ தெரேசியா தோட்டத்தின் தோட்ட அதிகாரி இமேஷ் போகவத்த தெரிவித்துள்ளார்.
ரஞ்சித் ராஜபக்க்ஷ , பி.கேதீஸ்




2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago