Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2015 நவம்பர் 19 , மு.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய மாகாணத்திலுள்ள 2,400 முன்பள்ளிகளை அபிவிருத்தி செய்வதற்கான நியதிச்சட்டம் சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக மத்திய மாகாணசபையின் முதல்வர் துரை மதியுகராஜா தெரிவித்தார்.
மத்திய மாகாண சபையின் மாதாந்தக் கூட்டம் செவ்வாய்க்கிழமை(17) பள்ளேகல மாகாண சபைக் கட்டடத்தில் சபைத் தலைவர் எல்.டி.நிமலசிறி தலைமையில் கூடியது.
இதன்போது, 'மத்திய மாகாண முன்பள்ளி பாடசாலைகள் அபிவிருத்தி நியதிச்சட்டம்' மற்றும் 'மத்திய மாகாண கிராம அபிவிருத்தி சங்க நியதிச்சட்டம்' என்பன ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக அவர் நேற்று(18) தெரிவித்தார்.
மத்திய மாகாண முன்பள்ளி பாடசாலைகள் அபிவிருத்தி நியதிச் சட்டத்தின் கீழ் மத்திய மாகாணத்திலுள்ள 2,400 முன்பள்ளிகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
இதுதொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்த அவர், மத்திய மாகாணத்திலுள்ள 2,400 முன்பள்ளிகளில் 740 முன்பள்ளிகள் மத்திய பெருந்தோட்டங்களுக்கு உட்பட்டவை. இச்சட்டத்தின் கீழ், மாகாணத்திலுள்ள அனைத்து முன்பள்ளிகளும் மத்திய மாகாணத்தின் முன்பள்ளி அபிவிருத்தி சபையின் கீழ் கொண்டு வரப்பட்டு நிர்வகிக்கப்படும்.
மத்திய மாகாணத்தில் முன்பள்ளிகள் தொடர்பில் எந்த சட்ட ஒழுங்களும் ஏற்படுத்தவில்லை. இதனை கருத்திற் கொண்டு இந்நியதிச் சட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இச்சட்டத்துக்கு ஆளுநரின் அனுமதி கிடைக்கப்பெற்று அது தொடர்பிலான அறிவித்தல் பத்திரிகைகளில் வெளியான பின்பு மத்திய மாகாணத்தில் பதியப்படாமலுள்ள அனைத்து முன்பள்ளிகளையும் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
இதேவேளை, ஏலவே இருந்த மத்திய மாகாண கிராமிய அபிவிருத்தி சங்க நியதிச்சட்டம் பல்வேறு திருத்தங்களுடன் சபையில் நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
9 hours ago
9 hours ago