Editorial / 2025 டிசெம்பர் 11 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

மாத்தளை மாவட்டத்தில் சுமார் 400 குடும்பங்களுக்கு மண் சரிவு மற்றும் பாறைகள் சரியும் அபாயம் இருப்பதால் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு தேசிய கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி அமைப்பு, புதிய எச்சரிக்கைகளை வியாழக்கிழமை (11) விடுத்துள்ளது.
தேசிய கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் மாத்தளை மாவட்டத் தலைவரும், மூத்த புவியியலாளருமான சமிந்த மோரேமட கூறுகையில், 400க்கும் மேற்பட்ட ஆபத்தான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்றார். .
தற்போது வீசும் பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக இந்த ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மாத்தளை நகரத்தை நோக்கிய தொடந்தெனிய மலையில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், பாறைகள் விழும் அபாயம் உள்ளதாகவும் அந்த அதிகாரி கூறினார்.
அம்போக்கா, வுலுகல, ஹுனுகல மற்றும் ராவணகந்த மலைத்தொடர்கள் புவியியல் மாற்றங்களுக்கு உள்ளாகி வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
4 hours ago
12 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
12 Dec 2025