Editorial / 2024 டிசெம்பர் 26 , பி.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

செ,திவாகரன், ரஞ்சித் ராஜபக்ஷ
நுவரெலியா ஹாவாஎலிய பகுதியில் சட்டவிரோத போதை பொருட்களுடன் வியாழக்கிழமை(26) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நுவரெலியா மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் 34 வயதுடைய ஒருவர் மதன மோதகத்துடன் கைது செய்துள்ளனர்,
கைது செய்யப்பட்ட குறித்த நபரிடமிருந்து கஞ்சா கலவை செய்யப்பட்ட 300 மதனமோதகம் போதை குளிசைகள் பொதி செய்யப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
எவ்வித அனுமதிப்பத்திரமும் இன்றி சட்டவிரோதமாக நடத்தி வந்த ஆயுர்வேத மருந்தக விற்பனை நிலையம் ஒன்றில் குறித்த மதன மோதக போதை குளிசைகளை விற்பனை செய்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட தன் பின்னர் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
5 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
8 hours ago