2025 மே 01, வியாழக்கிழமை

மதிலை கவிழ்த்து வீட்டுக்குள் நுழைந்த பஸ்

Editorial   / 2024 நவம்பர் 10 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீதியை விட்டு விலகிய தனியார் பஸ்ஸொன்று  அருகில் உள்ள வீடொன்றின் மதிலை கவிழ்த்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம், பதுளை- மஹியங்கனை பிரதான வீதியில்    படலபிட்டிய பிரதேசத்தில் பலகொல்ல எனுமிடத்தில் ஞாயிற்றுக்கிழமை (10) காலை இடம்பெற்றுள்ளது. 

இந்த விபத்தில் பஸ்ஸின் சாரதிக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ் விபத்துக்குள்ளான போது, வீட்டில் ஒரு சிறு குழந்தை மற்றும் ஒரு தம்பதி இருந்ததாகவும், ஆனால் அவர்கள் ஒரே அறையில் இருந்ததால், குடியிருப்பாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ் விபத்துக்குள்ளான வேளையில் பஸ்ஸில் சுமார் 30 பேர் பயணித்ததாகவும், தினமும் பயணிக்கும் இந்த பேருந்தில் பாடசாலை ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் என பலரும் பயணித்ததாகவும், ஆனால் ஞாயிற்றுக்கிழமை (10)  குறைந்த எண்ணிக்கையான பயணிகளே பயணித்தனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .